மழை நீர் சேகரிப்பு அமைப்பை உருவாக்க திட்டம் : பழைய கிணறுகளை புனரமைத்து, பயன்படுத்த திட்டம்

நிலத்தடி நீரை பெருக்கவும், மழை நீர் சேகரிப்பு குறித்தும் சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மழை நீர் சேகரிப்பு அமைப்பை உருவாக்க திட்டம் : பழைய கிணறுகளை புனரமைத்து, பயன்படுத்த திட்டம்
x
மழைநீரை சேமித்து, நிலத்தடி நீர் வளத்தை அதிகரிக்கும் மழைநீர் சேகரிப்பு திட்ட பணிகளை மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் செயல்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுத்து வருவதாக மாநகராட்சி கூறியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட மழை நீர் சேகரிப்பு திட்டத்துக்கு முக்கியத்துவம் அளித்து, மீண்டும் அதை முன்னெடுத்துள்ளதாக கூறியுள்ள மாநகராட்சி நிர்வாகம், சென்னை மாநகராட்சியில் வார்டு ஒன்றுக்கு ஒரு குழு வீதம் 200 குழுக்கள் அமைக்கப்பட்டு, மழைநீர் சேகரிப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக மாநகராட்சி நிர்வாகம் கூறியுள்ளது. வார்டுக்கு ஆயிரம் கட்டிடங்கள் வீதம் 200 வார்டுகளில் 2 லட்சம் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளது. அடையாளம் காணப்பட்ட 23 சமுதாய கிணறுகளை புனரமைப்பு செய்து மழைநீர் சேகரிப்பது, வீடு தோறும் மழை நீர் சேகரிப்பு அமைப்பை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது. நிலத்தடி நீரை பெருக்க சென்னை மாநகராட்சியுடன் பொதுமக்களும் கைகோர்த்து, மழை நீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்த முன்வர வேண்டும் என்று கோரிக்கை  விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்