வேலூர் மக்களவை தேர்தல் ஏற்பாடுகள் : பாதுகாப்பு குறித்து காணொலி மூலம் ஆய்வு
வேலூர் மக்களவைத் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரத சாகு காணொலி மூலம் ஆய்வு மேற்கொண்டார்.
வேலூர் மக்களவைத் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரத சாகு காணொலி மூலம் ஆய்வு மேற்கொண்டார். வேலூர் தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், இது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், காவல்துறை தலைமை இயக்குனர் திரிபாதி, செலவின பார்வையாளர் முரளிகுமார் மற்றும், வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோருடன், சத்தியபிரதா சாகு ஆலோசனை நடத்தினார்.
Next Story