கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக வீடுகள் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 16 ஆயிரத்து 695 தனி வீடுகளும், அடுக்கு மாடி வீடுகளாக 28 ஆயிரத்து 671 வீடுகளும் கட்டிக் கொடுக்கப்பட்டு வருவதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக வீடுகள் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்
x
ஆதி திராவிடர் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, கஜா புயலால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு எத்தனை வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது என  கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை,  உள்ளிட்ட மாவட்டங்களில் தனி வீடுகளாகவும் நிலம் இல்லாதவர்களுக்கு அடுக்குமாடி வீடுகளாகவும் கட்டிக் கொடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். நிலம் உள்ளவர்களுக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வீடு கட்டுவதற்காக காசோலை வழங்கப்பட்டதாகவும் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்