பிராந்திய மொழிகளில் வெளியிடப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்புகள் : தமிழில் தீர்ப்புகள் மொழி பெயர்க்கப்படாததால் சர்ச்சை

உச்சநீதிமன்ற தீர்ப்புகள், தமிழில் மொழி பெயர்க்கப்படாதது சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
பிராந்திய மொழிகளில் வெளியிடப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்புகள் : தமிழில் தீர்ப்புகள் மொழி பெயர்க்கப்படாததால் சர்ச்சை
x
உச்ச நீதிமன்றத்தில் புதிய கட்டடத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். இந்த விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் உச்ச நீதிமன்றத்தின் 100 முக்கிய வழக்குகளின்  தீர்ப்புகள் பிராந்திய மொழிகளில் வெளியிடப்பட்டன. இதன் நகல்களை, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பெற்றுக்கொண்டார். இது குறித்து சமூகவலைத்தளத்தில் கருத்து தெரிவித்த அவர், மொழி பெயர்க்கப்பட்ட 100 முக்கியமான வழக்குகளின் தீர்ப்பை பெற்றுக் கொள்வதில் மகிழ்ச்சியடைவதாக கூறியுள்ளார். இதனிடையே, தமிழில் தீர்ப்புகள் மொழி பெயர்க்கப்படாதது சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்