தாம்பரம் இரட்டை கொலையில் 4 பேர் கைது
தாம்பரம் இரட்டை கொலை சம்பவத்தில் 4 பேர் போலீசார் வசம் சிக்கியுள்ளனர்.
சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம் அற்புதம் நகர் பகுதியை சேர்ந்த பிரதீப் குமார், கிழக்கு தாம்பரம் ஆதி நகர் பகுதியை சேர்ந்த புட்டி சுரேஷ் ஆகியோர் முன்விரோதம் காரணமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இவர்கள் மீது அடிதடி வழிப்பறி போன்ற பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் புட்டி சுரேஷ் கடந்த 3 மாதங்களுக்கு முன் குண்டர் சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்து வெளியே வந்திருந்தார். விசாரணை ஒன்றுக்காக பிரதீப்பை தேடி வந்த போலீசார், அவரது மனைவியை காவல் நிலையம் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த பிரதீப் மற்றும் புட்டி சுரேஷூடன் தன் வீட்டிற்கு வந்த போது, மர்ம நபர்கள் அவர்களை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த பூபாலன், ஜெயபாபு, மணிகண்டன், அன்பழகன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். லாரி ஓட்டுநர் ரங்கநாதன் என்பவரை தாக்கியதால், இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதாகவும், அதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் இந்த இரட்டை கொலை நடந்தேறி உள்ளதாகவும், போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Next Story