ஹைட்ரோ கார்பன் திட்டம் : சட்டப்பேரவையில் காரசார விவாதம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு, தமிழகத்தில் அனுமதி கிடையாது என்ற கொள்கை முடிவை அரசு எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
x
சட்டப்பேரவையில் இன்று விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அளித்த பதிலை சுட்டிக்காட்டினார். இதற்கு பதில் அளித்து பேசிய சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தமிழக அரசின் அனுமதி இல்லாமல் திட்டத்தை தொடங்க முடியாது என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட ஸ்டாலின், விவசாயிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக போராட்டம் நடத்துபவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் அமைச்சர் பேசக்கூடாது என்றார். அதற்கு, ஹைட்ரோ கார்பன் திட்டம் எந்த வடிவில் வந்தாலும் அனுமதிக்க மாட்டோம் என்றும், அரசியலுக்காக போராட்டம் நடத்தினால் நாங்கள் எதுவும் செய்ய முடியாது என்று அமைச்சர் சி.வி.சண்முகம் பதில் அளித்தார். சட்ட ரீதியாக நிறுத்தவும், திட்டத்தை தடுக்கவும், சம்பந்தபட்டவர்கள் மீறும் போது, நடவடிக்கை எடுக்கவும் நமக்கு உரிமை இருக்கிறது என்றும், அப்படி இருக்கும்போது, எதற்காக போராட்டம் நடத்த வேண்டும் என்றும் அமைச்சர் சி.வி. சண்முகம் கேள்வி எழுப்பினார்.

Next Story

மேலும் செய்திகள்