காஷ்மீர் முதல் கன்னியாகுமரி 4 லட்சம் விதை பந்துகள் தூவி மாணவி சாதனை
பூமி வெப்பமயமாதலை தடுக்க காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 8 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு, 4 லட்சம் விதை பந்துகள் தூவிய மாணவி ரக்ஷனாவின் சாதனை நிறைவு விழா கரூரில் நடைபெற்றது.
பூமி வெப்பமயமாதலை தடுக்க காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 8 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு, 4 லட்சம் விதை பந்துகள் தூவிய மாணவி ரக்ஷனாவின் சாதனை நிறைவு விழா கரூரில் நடைபெற்றது. கரூரில் தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ரக்ஷனா, உலக அமைதிக்காகவும், பூமி வெப்பமயமாதலை தடுக்கவும் பல சாதனைகளை படைத்துள்ளார். இந்நிலையில் தற்போது இந்தியா முழுவதும் 30 நாட்களில் 8 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து 4 லட்சம் விதை பந்துகளை தூவி சாதனை படைத்துள்ளார். கரூரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற இதன் நிறைவு விழாவில், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் அவரை வாழ்த்தி பாராட்டினர்.
Next Story