ஜூலை 16 - உலகை உலுக்கிய கும்பகோணம் பள்ளி தீ விபத்து..
மாறாத ரணத்தை ஏற்படுத்திய கும்பகோணம் தீ விபத்து சம்பவம் நடந்த தினம் இன்று...
2004 ஆம் ஆண்டு இதே ஜூலை 16ஆம் தேதி உற்சாகத்தோடு பள்ளிக்கு சென்ற அந்த பிஞ்சுக் குழந்தைகள் நிச்சயம் நினைத்திருக்க மாட்டார்கள் இப்படி ஒரு சம்பவம் நடக்குமென... தங்கள் பிள்ளைகளுக்கு தலை வாரி பூச்சூட்டி பள்ளிக்கு அனுப்பிய பெற்றோருக்கும் இடியென இறங்கியது அந்த செய்தி...
காசிராமன் தெருவில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா தொடக்கப் பள்ளியில் நடந்த அந்த கொடூர தீ விபத்தில் 94 பிஞ்சுக் குழந்தைகளின் உயிரை குடித்தது நெருப்பு. தீ விபத்தில் தங்கள் பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோர் கதறி துடித்தனர். சுட்டியாக சுற்றித் திரிந்த மொட்டுகள் மலர்வதற்கு முன்பாகவே உதிர்ந்து போனது. இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டதோடு, பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
உலகையே உலுக்கிய இந்த சம்பவம் நடந்து 15 ஆண்டுகள் ஆனாலும் இன்னமும் அந்த ரணம் ஏற்படுத்திய வடு மாறாமல் உள்ளது. இந்த கோர சம்பவம் நடந்த தினமான ஜூலை 16ஆம் தேதியை பள்ளிக்குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அரசு அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தமிழகத்தில் உள்ள மற்ற பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
Next Story