அரசு மருத்துவர் வீட்டில் ரூ.20 லட்சம் நகைகள் கொள்ளை
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே அரசு மருத்துவர் வீட்டின் கதவை உடைத்து 20 லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே அரசு மருத்துவர் வீட்டின் கதவை உடைத்து 20 லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சாலையப்பாளையம் பகுதியை சேர்ந்த அரசு மருத்துவர் ரங்கசாமி, கடந்த சனிக்கிழமை உறவினர் திருமணத்திற்காக குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். இந்நிலையில் வீடு திரும்பிய அவர், வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த 20 லட்ச ரூபாய் மதிப்பிலான 70 சவரன் நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது. இது குறித்த தகவலின் பேரில் வந்த போலீசார், விசாரித்து வருகின்றனர்.
Next Story