மக்காச் சோள இறக்குமதி வரியை ரத்து செய்யக் கோரி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்
கோழித் தீவனம் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
கோழிப் பண்ணைகளில் ஏற்பட்டுள்ள சோளத் தீவன தட்டுப்பாட்டை போக்க, இறக்குமதி வரியை ரத்து செய்யுமாறு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழகம் மற்றும் ஆந்திராவில், சோளப் பயிரில் பூச்சி தாக்கியதால், விளைச்சல் குறைந்துள்ளதாக கூறியுள்ளார். இதனால், கோழிக்கு தீவனம் இல்லாமல், பண்ணையாளர்கள் அவதி அடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், தீவனப் பற்றாக்குறையை போக்க வெளி மாநிலங்களில் இருந்து சோளம் இறக்குமதி செய்ய வேண்டியுள்ளதாக கூறியுள்ளார்.கோழிப் பண்ணையாளர்கள் நலன் கருதி, சோளம் இறக்குமதிக்கான வரியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார்.
Next Story