தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது .
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது . வெப்பச்சலனம் காரணமாக வேலூர், திருவண்ணாமலை , காஞ்சிபுரம்,வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தென் மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக நீலகிரி, கோவை,தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.. சென்னையை பொறுத்தவரை வானம் மேக முட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில இடங்களில் மாலை இரவு நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது...
Next Story