பொன் மாணிக்கவேல் மீது வழக்கு பதிவு செய்யக் கோரிய மனு - "புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?"

சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு எதிரான புகார் மீது எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட டி.எஸ்.பி. காதர் பாஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். பழிவாங்கும் நோக்கில் தனக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்வதாகவும், உயர் நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றத்தை அவர் தவறாக பயன்படுத்துவதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக உள்துறை செயலாளர், டிஜிபி மற்றும் சிபிசிஐடிக்கு புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் அதன் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மனுதாரர் அளித்த புகார் மீது எடுத்த நடவடிக்கை குறித்து ஜூலை 24ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி-க்கு உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்