பவானி சாகரிலிருந்து வினாடிக்கு 1,000 கனஅடி நீர் திறப்பு
காவிரி டெல்டா பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, பவானிசாகர் அணையிலிருந்து விநாடிக்கு ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளது.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள இரண்டு லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலம பாசன வசதி பெறுகின்றன. அணையில் தற்போது நீர் இருப்பு 6.9 டி.எம்.சி. யாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு நீர்வரத்து 415 கனஅடியாகவும், அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 205 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காவிரி டெல்டா பகுதி குடிநீர் தேவைக்காக நேந்றிரவு 7 மணி முதல் வினாடிக்கு ஆயிரம் கனஅடி நீர் பவானி ஆற்றில் திறக்கப்பட்டு உள்ளது. தண்ணீர் திறப்பு 10 நாட்களுக்கு தொடரும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story