107 வது பிறந்த நாள் கொண்டாடிய முதியவர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 107 வயது முதியவர் ஒருவர் தனது பிறந்த நாளை, பிள்ளைகள், பேரன் பேத்திகள், கொள்ளுபேரக் குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே பெருமருதூர் கிராமத்தில் வசித்து வருகிறார் கருப்பையா. 107 வயதான அவரது பிறந்த நாளை 4 மகன்கள், 3 மகள்கள் , 22 பேரக்குழந்தைகள், 38 கொள்ளுபேர குழந்தைகள் என அனைவரும் ஒன்றாக கூடி கொண்டாடி மகிழ்ந்தனர். இதற்காக புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர் என பல ஊர்களில் இருந்தும் கூடிய அவரது உறவினர்கள், கேக் வெட்டி கொண்டாடி, செல்பி எடுத்துக் கொண்டனர். அவரது உடன் ஆரோக்கியம் குறித்து கூறிய, உறவினர்கள், கீரை, காய்கறிகள், கம்மங்கூழ், கேழ்வரகு கூழ் என சத்தான உணவுகளும், சிறு வயதிலிருந்தே கடின உழைப்பு ஆகியவைதான் தற்போதும் நல்ல உடல் நலத்தோடு இருப்பதற்கு காரணம் என்று குறிப்பிட்டனர்.
Next Story