நீர் ஆதாரமாக விளங்கிய, சோழி பொய்கை குளம் : 40 ஆண்டுக்குப்பின், தூர்வாரும் பணியை தொடங்கிய மக்கள்

மாமல்லபுரம் சோழி பொய்கை குளம் தூர் வாரும் பணி, 40 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கி உள்ளது.
நீர் ஆதாரமாக விளங்கிய, சோழி பொய்கை குளம் : 40 ஆண்டுக்குப்பின், தூர்வாரும் பணியை தொடங்கிய மக்கள்
x
மாமல்லபுரம் சோழி பொய்கை குளம் தூர் வாரும் பணி, 40 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், வடக்கு மாமல்லபுரம் பகுதியில் 6 ஏக்கர் பரப்பளவில் உள்ள சோழி பொய்கை குளம் அப்பகுதி மக்களுக்கு நீர் ஆதாரமாகவும், விவசாய நிலங்களுக்கு நீர் பாசன வசதி அளிக்கும் முக்கிய குளமாகவும் திகழ்ந்தது. இந்த குளத்தை தூர் வாரி சீரமைத்து தரவேண்டும் என, மாவட்ட நிர்வாகத்துக்கு அப்பகுதி மக்கள் பலமுறை  கோரிக்கை விடுத்து வந்தனர். குளத்தை தூர்வார அனுமதி வழங்கிய மாவட்ட நிர்வாகம், அதற்கான நிதியை ஒதுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், அரசின் நிதி உதவியை எதிர்பார்க்காமல், அந்த குளத்தை தூர் வாரும் பணியை பொதுமக்க​​ளே தொடங்கி உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்