ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் புனரமைப்பு குறித்த நூல் வெளியீடு - குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்பு
எந்த மொழியையும் திணிக்கவும் கூடாது..எதிர்க்கவும் கூடாது என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
இந்து சமய அறநிலைய வாரியம், இந்திய கலாச்சார தொன்மை அறக்கட்டளை, சென்னை வேணுகோபாலசுவாமி கைங்கரியம் அறக்கட்டளை ஆகியவை இணைந்து ஸ்ரீரங்கம் கோவிலை 16 மாதத்திற்குள் புனரமைத்திருந்தன. கோவிலின் பாரம்பரியத்தை அதன் பழமை மாறாமல் எதிர்கால தலைமுறையினருக்கு தெரியப்படுத்தும் வகையில் கோவில் புனரமைக்கப்பட்டது .கோயில் புனரமைப்பு பணிக்காக ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் கலாச்சார பாரம்பரிய பாதுகாப்பு விருது வழங்கி யுனெஸ்கோ நிறுவனம் கௌரவம் செய்துள்ளது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் புனரமைப்பு குறித்த நூல் வெளியீடு :
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் பாரம்பரியத்தை அதன் பழமை மாறாமல் புனரமைக்கப்பட்டது குறித்த நூல் வெளியீட்டு விழா சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது . அந்த புத்தகத்தை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டார்.விழாவில் பேசிய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு , நமது பாரம்பரியம், கலாச்சாரம், கோவில்களை இளைய சமுதாயத்தினர் பாதுகாத்திட வேண்டும் என்றார். ஒரு சிலர் தம்மை இந்து என சொல்லிக்கொள்வதில், தயக்கம் காட்டுவதாகவும், நாட்டில் 80 சதவிகிதம் இந்துக்கள் இருக்கும் போது தயங்குவது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.எந்த மொழியையும் திணிக்கவும் கூடாது, எதிர்க்கவும் கூடாது என்று கேட்டுக் கொண்ட அவர் , தாம் ஆங்கிலத்துக்கு எதிரானவன் அல்ல என்றார் . நேர்மையில்லாத வகையில் பணம் சம்பாதிப்பவர்களுக்கு சிறைகளை மோடி தயார் செய்து கொண்டிருப்பதாவும் அவர் குறிப்பிட்டார் . அரசியலில் குதிரை பேரம் நடப்பதாக வெங்கையா நாயுடு வேதனை தெரிவித்தார்.
ஆளுநர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பு :
புத்தகவெளியீட்டு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர்கள் ஜெயக்குமார், சேவூர் ராமச்சந்திரன், ஸ்ரீரங்கம் கோவில் அறங்காவலர் குழு தலைவரும், தொழிலதிபருமான வேணு சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story