நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க அனுமதி - மத்திய அரசுக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டனம்
நியூட்ரினோ ஆய்வு மையம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அந்த திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
"நியூட்ரினோ" ஆய்வு மையம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அந்த திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழக மக்களின் எதிர்ப்பையும் மீறி நியூட்ரினோ திட்டத்திற்கு அரசு அனுமதி அளித்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். தமிழக மக்களின் பாதுகாப்பு பற்றி சிறிதும் அக்கறையின்றி பா.ஜ.க. அரசு செயல்படுவதாகவும் அதில் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். தேனியை சேர்ந்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, நியூட்ரினோ திட்டத்தை கைவிட வைக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
Next Story