போக்குவரத்தை சீர் செய்த சமூக ஆர்வலர் கொலை - ஆட்டோ ஓட்டுனர் கைது

மதுரை முனிச்சாலை சந்திப்பு அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து கணேசன் என்பவர் தாமாக முன்வந்து அதை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
போக்குவரத்தை சீர் செய்த சமூக ஆர்வலர் கொலை - ஆட்டோ ஓட்டுனர் கைது
x
மதுரை முனிச்சாலை சந்திப்பு அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து கணேசன் என்பவர் தாமாக முன்வந்து அதை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது, அந்த வழியாக ஆட்டோ ஓட்டி வந்த சுப்பிரமணி என்பவர் மதுபோதையில் கணேசனுடன் தகராறு செய்து, அவரை கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது.  இதில் படுகாயமடைந்த கணேசன், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, சுப்பிரமணியனை போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்