ஆரஞ்சு நிறப் பட்டு அலங்காரத்தில் அத்திவரதர்
அத்திவரதரை தரிசனம் செய்ய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வந்ததால் பக்தர்களுக்கான தரிசனம் 4 மணி நேரம் ரத்து செய்யப்பட்டது.
அத்திவரதரை தரிசனம் செய்ய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வந்ததால், பக்தர்களுக்கான தரிசனம் 4 மணி நேரம் ரத்து செய்யப்பட்டது.காஞ்சிபுரத்தில் அத்திவரதர் உற்சவம் கடந்த ஒன்றாம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 48 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில், 24 நாட்கள் சயன நிலையிலும், 24 நாட்கள் நின்ற நிலையிலும் அத்திவரதர் காட்சியளிப்பார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிறப் பட்டு ஆடையில், பக்தர்களுக்கு அத்திவரதர் காட்சியளித்து வருகிறார். இதன்படி பன்னிரெண்டாம் நாளில், அத்திவரதருக்கு ஆரஞ்சு நிறப்பட்டு ஆடை உடுத்தி அலங்காரம் செய்யப்பட்டது.காலை முதலே திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதனிடையே, குடியரசு தலைவர் அத்திவரதரை தரிசனம் செய்ய வந்ததால், மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை பக்தர்களுக்கான தரிசனம் ரத்து செய்யப்பட்டது.
Next Story