அண்ணா பல்கலை. உறுப்பு கல்லுாரிகளின் புதிய கல்வி கட்டணம் : உயர்கல்வித்துறை அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 20 கல்லூரிகளுக்கு புதிய கல்வி கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலை. உறுப்பு கல்லுாரிகளின் புதிய கல்வி கட்டணம் : உயர்கல்வித்துறை அறிவிப்பு
x
அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் 4 வளாக கல்லூரிகள் மற்றும் 16 உறுப்பு கல்லூரிகள் என மொத்தம் 20 கல்லூரிகள் இயங்குகின்றன. 20 கல்லுாரிகளுக்கும் நடப்பு கல்வி ஆண்டு முதல், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளுக்கு புதிய கல்வி கட்டணத்தை உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. சமீபத்தில் கல்வி கட்டணங்களை இரண்டு மடங்கிற்கும் மேலாக உயர்த்தியிருந்த நிலையில், உயர்கல்வித்துறை தலையிட்டு, அதிக கல்விக் கட்டணங்களை கணிசமாக குறைத்து, ஓரளவிற்கு கட்டணங்களை உயர்த்தி அனுமதி வழங்கியது. அதன்படி, பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கு, ஒரு ஆண்டுக்கான கல்வி கட்டணம் 30 ஆயிரம் ரூபாய் எம்.இ.,- எம்.டெக்., எம்.பில்., படிப்புகளுக்கு, ஆண்டு கட்டணம் 40 ஆயிரம் ரூபாய் எம்.ஆர்க்.,- எம்.பிளான் படிப்புகளுக்கு, 61 ஆயிரம் ரூபாய்.  எம்.பி.ஏ., படிப்பிற்கு 43 ஆயிரத்து 30 ரூபாய் மற்றும் எம்.சி.ஏ., படிப்பிற்கு 35 ஆயிரத்து 930 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  இந்த புதிய கல்வி கட்டணம் நடப்பு கல்வி ஆண்டில் இருந்து அமலுக்கு வரும் எனவும் உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்