தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் பல மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் பல மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குறிப்பாக திண்டுக்கல்,கரூர், திருச்சி, கடலூர், கோவை, உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக கரையோரம் வலுவான காற்று வீசக்கூடும் என்றும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் மாலை அல்லது இரவில் நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story