தமிழகத்தில் ஆங்காங்கே கனமழை பெய்யும் - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உத்தரகாண்ட், மேற்கு உத்தரபிரதேசம், திரிபுரா, கோவா, கடலோர கர்நாடகாவின் பல பகுதிகளில் மிக கன மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது. வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், உள் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Next Story