தமிழகத்தில் ஆங்காங்கே கனமழை பெய்யும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில், ஆங்காங்கே கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதே போல் உத்தரகாண்ட், மேற்கு உத்தரபிரதேசம், திரிபுரா, கோவா, கடலோர கர்நாடகாவின் பல பகுதிகளில் மிக அதிக கன மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. இதனிடையே, வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், உள் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Next Story