நீட் விலக்கு மசோதாக்கள் நிராகரிப்பு : ஸ்டாலின் - சி.வி.சண்முகம் கருத்து மோதல்
நீட் விலக்கு கோரும் தமிழகத்தின் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, சட்ட அமைச்சர், ஸ்டாலின் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் சட்டப்பேரவையில் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டப்பேரவையில் தி.மு.க சார்பில், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. உண்மைக்கு புறம்பான தகவலை சொல்லி, 19 மாதங்களாக தமிழக மக்களை சட்ட அமைச்சர் ஏமாற்றி விட்டதாக ஸ்டாலின் குற்றம்சாட்டினார். இதற்கு தார்மீக பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த சட்ட அமைச்சர், தமிழகத்தின் இரண்டு மசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும், உரிய காரணம் கேட்டு குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் விளக்கம் அளித்தார். நிறுத்தி வைக்கப்பட்ட காரணத்தை விளக்கினால், தீர்வு காண அரசு தயாராக இருப்பதாக சி.வி.சண்முகம் குறிப்பிட்டார். நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் விவகாரத்தில், உண்மை நிலையை தாம் மறைக்கவில்லை எனக் குறிப்பிட்ட சட்ட அமைச்சர், பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தும், தங்களின் கனவு எந்த காலத்திலும் நிறைவேறாது என, பதிலளித்தார்.
Next Story