அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து திருமாவளவன் மனு
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் மற்றும் ரவிக்குமார் எம்.பி. ஆகியோர் டெல்லியில் சந்தித்தனர்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் மற்றும் ரவிக்குமார் எம்.பி. ஆகியோர் டெல்லியில் சந்தித்தனர். அப்போது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு கடன் வழங்கும் திட்டத்தில் கடன் தொகையை 50 ஆயிரம் ரூபாயாக அதிகரிப்பது, வணிகர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்கும் திட்டத்தில் சாலையோர வியாபாரிகளையும் சேர்ப்பது, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.
Next Story