தகுதி நீக்கம் செய்யப்பட்ட பள்ளி வாகனங்கள் பறிமுதல்

ஆபத்தான முறையில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற தகுதி நீக்கம் செய்யப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட பள்ளி வாகனங்கள் பறிமுதல்
x
ஆபத்தான முறையில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற தகுதி நீக்கம் செய்யப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டாரத்தில் செயல்பட்டு வரும் 30 க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளின் வாகனங்கள் கடந்த மே மாதத்தில் ஆய்வு செய்யப்பட்டன. அவற்றில்10 க்கும் மேற்பட்ட வாகனங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அந்த வாகனங்களில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்வதாக ஓமலூர் மோட்டார் வாகன ஆய்வாளருக்கு புகார் வந்துள்ளது. அதனடிப்படையில் திடீர் வாகன சோதனை மேற்கொண்டு,  இரண்டு பள்ளி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. தகுதி நீக்கம் செய்யப்பட்ட பேருந்துகளில் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் எச்சரிக்கை செய்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்