ஒசூர் : மனிதநேயம் தழைக்க காஷ்மீர் முதல் குமரி வரை விழிப்புணர்வு பிரசாரம்
மனித நேயம், ஒற்றுமை, அமைதி மற்றும் சமத்துவம் ஆகியவற்றை உணர்த்த வலியுறுத்தி சுபியா என்ற இளம்பெண் ஒருவர், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை விழிப்புணர்வு ஓட்டத்தை மேற்கொள்வது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சூபியா என்ற இளம்பெண், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நான்காயிரத்து 35 கிலோ மீட்டர் தூரத்தை ஓடி விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தார். 100 நாட்களில் இந்த பயணத்தை முடித்து இலக்கை அடைய முடிவு செய்துள்ள சூபியா, கர்நாடகத்தை கடந்து தமிழகத்தை அடைந்தார். ஏப்ரல் 25ஆம் தேதி, காஷ்மீரில் தனது ஓட்டப் பயணத்தை தொடங்கிய சூபியா, நூறு நாட்களில் இலக்கை அடையும் நோக்கில், உத்தரபிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் வழியாக இன்று தமிழகம் வந்தடைந்தார். ஏற்கனவே, ஆக்ரா முதல் டெல்லி வரையான 720 கிலோ மீட்டர் தூரத்தை 16 நாட்களில் கடந்து சாதனை படைத்துள்ளார். இவருடைய விழிப்புணர்வு பிரசாரத்தை பாராட்டி, சமூக ஆர்வலர்கள் உதவி செய்து வருகின்றனர்.
Next Story