குடியாத்தம் : சுதந்திர போராட்ட வீரர்கள் அமைத்த நேதாஜியின் சிலையை சீரமைக்க கோரிக்கை
சுதந்திர இந்தியாவில், தமிழகத்தில் அமைத்த முதல் நேதாஜி சிலை, பராமரிப்பின்றி இருப்பதாக குடியாத்தம் பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சுதந்திர இந்தியாவில், தமிழகத்தில் அமைத்த முதல் நேதாஜி சிலை, பராமரிப்பின்றி இருப்பதாக குடியாத்தம் பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். வேலூரில் இருந்த சுதந்திர போராட்ட வீரர்கள் 5 பேர் திரண்டு, 1948ஆம் ஆண்டு நேதாஜி சிலையை அமைத்ததாகவும், காந்தியின் மகன் திறந்து வைத்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது, பராமரிப்பின்றி சிலை உடைந்துள்ளதாகவும், சுற்றுச் சுவர் இடிந்ததால், குப்பை மேடாக காட்சி அளிப்பதாகவும் குற்றம்சாட்டினர். உடனடியாக சிலையை சீரமைத்து, மணிமண்டபம் அமைக்குமாறும் தியாகிகளின் வாரிசு சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story