சிலைகள் மாயமான விவகாரத்தில் அடுத்த பரபரப்பு... திருமகள் முன்பு சிலைகளுக்கு பூஜை செய்த வீடியோ
தமிழக கோவில்களில் இருந்து சிலைகள் மாயமானது குறித்த புகார்களும், வழக்குகளும் கடந்த காலங்களில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது இந்த விவகாரத்தில் மேலும் ஒரு பரபரப்பான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது...
சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் 2 துவார பாலகர்கள், 2 துவார பாலகிகள், ராகு, கேது, மற்றும் மயில் சிலைகள் காணாமல் போனதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து புகார் பதிவாகி, கைதுகளும், நடந்தேறின. இந்த வழக்கை தற்போது உயர்நீதிமன்ற சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. ஆனால், கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து எந்த சிலைகளும் மாயமாகவும் இல்லை, மாற்றப்படவும் இல்லை என அக்கோவிலின் முன்னாள் இந்து சமய அறநிலைய துறையின் இணை ஆணையர் திருமகள், உயர்நீதிமன்ற 2 நீதிபதிகள் கொண்ட அமர்வில் வாக்குமூலம் அளித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, மிகுந்த சவால்களை கடந்து 2004ம் ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை சிறப்பு புலனாய்வு குழு, நீதிமன்றத்தில் வழங்கியுள்ளது. இந்த வீடியோவில், திருமகள் முன்னிலையிலே, அவர் குறிப்பிட்ட சிலைகளுக்கான பூஜைகள் நடக்கும் காட்சிகள் அடங்கியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
Next Story