திமுக எம்.பி. கனிமொழி வெற்றியை எதிர்த்து வழக்கு : சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழிசை மனுத்தாக்கல்

தூத்துக்குடி மக்களவைத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி வெற்றியை எதிர்த்து பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
x
தூத்துக்குடி மக்களவைத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி வெற்றியை எதிர்த்து பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர், தாக்கல் செய்த மனுவில், முறையற்ற வகையில் கனிமொழி வேட்பு மனு தாக்கல் செய்ததாக கூறியுள்ளார். வேட்புமனுக்கள் பரிசீலனையின் போது ஆட்சேபனை தெரிவித்த போதும்,  தேர்தல் அதிகாரி அதனை நிராகரித்து விட்டதாக  தமிழிசை  குற்றம் சாட்டி உள்ளார். கனிமொழியின் கணவர் மற்றும் மகன் சிங்கப்பூர் பிரஜை எனக் கூறியுள்ள கனிமொழி அதற்குரிய குடிமக்கள் பதிவுச் சான்றிதழை இணைக்கவில்லை என தெரிவித்தார்.  பிரச்சாரத்தின்போது ஆரத்தி எடுத்த பெண்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கியதாகவும் தமிழிசை குற்றம் சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்