உள்ளாட்சி தேர்தல் : எஸ்.பி. வேலுமணி விளக்கம்
வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்த உடன், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்த உடன், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார். சட்டப்பேரவையில், உள்ளாட்சித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணி, உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, உள்ளாட்சி தேர்தலை நடத்த, மாநில தேர்தல் ஆணையம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக விளக்கம் அளித்தார்.
Next Story