உப்பு கலந்த தண்ணீரால் பெண் தர மறுக்கிறார்கள் - சட்டப்பேரவையில் எம்எல்ஏ பேச்சு
திட்டக்குடி தொகுதியில் உப்பு கலந்த தண்ணீர் வருவதால் இளைஞர்களுக்கு பெண் தர மறுப்பதாக சட்டப்பேரவையில் எம்எல்ஏ கணேசன் தெரிவித்தார்.
திட்டக்குடி தொகுதியில் உப்பு கலந்த தண்ணீர் வருவதால் இளைஞர்களுக்கு பெண் தர மறுப்பதாக சட்டப்பேரவையில் எம்எல்ஏ கணேசன் தெரிவித்தார். உப்பு தண்ணீரை குடிப்பதால் மக்களுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர், தண்ணீர் பிரச்சினையை போக்க கொள்ளிடம் குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் கால்நடைகளுக்கு 15 ஆயிரத்து 500 குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளதாகவும், திட்டக்குடி தொகுதியில் நல்ல தண்ணீருடன் தொட்டி அமைக்கப்படும் எனவும், கால்நடை மருத்துவமனை அமைக்கப்படும் என உறுதியளித்தார்.
Next Story