வழக்கறிஞர் நந்தினியின் சிறை சட்ட விரோதமானது - வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

மதுவுக்கு எதிராக போராடிவரும் வழக்கறிஞர் நந்தினி மற்றும் அவரது தந்தையை கைது செய்தது சட்ட விரோதமானது என மனித உரிமை பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளரான வழக்கறிஞர் வாஞ்சிநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.
வழக்கறிஞர் நந்தினியின் சிறை சட்ட விரோதமானது - வழக்கறிஞர் வாஞ்சிநாதன்
x
மதுவுக்கு எதிராக போராடிவரும் வழக்கறிஞர் நந்தினி மற்றும் அவரது தந்தையை கைது செய்தது சட்ட விரோதமானது என மனித உரிமை பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளரான வழக்கறிஞர் வாஞ்சிநாதன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக, மதுரையில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன், நீதித்துறை நடுவரின் உத்தரவு சட்ட விரோதமானது என்றும், நந்தினியும், அவரது தந்தையும் சட்ட விரோத காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார். தங்கள் வழக்கோடு பொருந்திய கேள்வியை மட்டுமே இருவரும் நீதிமன்றத்தில் எழுப்பியதாக கூறிய அவர், வழக்கு தொடர்பாக நீதிமன்ற நடுவரிடம் கேள்வி எழுப்பியவர்களின் விளக்கத்தை கேட்க வேண்டும் என்று கூறினார். நந்தினி வழக்கில், விரோதமாக நடைபெற்றுள்ளது என்று குற்றம்சாட்டிய வழக்கறிஞர் வாஞ்சிநாதன், இனிமேல் நந்தினி பேசமாட்டார் என ஜாமீன் தாரர்களிடம் வாக்குறுதி கேட்பது சட்டவிரோதமானது என்றார். நீதிமன்றங்கள் சட்டத்திற்கு மீறி நிபந்தனை விதிப்பதாக வாஞ்சிநாதன் குற்றம்சாட்டினார். 


Next Story

மேலும் செய்திகள்