ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள், கிராம மக்கள் போராட்டம்
காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியும் ஹைட்ரோ கார்பன், கெயில் உள்ளிட்ட திட்டங்களை கைவிட வலியுறுத்தியும் தஞ்சாவூர் அருகே குடிகாடு கிராமத்தில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியும் ஹைட்ரோ கார்பன், கெயில் உள்ளிட்ட திட்டங்களை கைவிட வலியுறுத்தியும் தஞ்சாவூர் அருகே குடிகாடு கிராமத்தில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவர்கள் மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். மறியலால் தஞ்சை நாகை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் தடுத்து நிறுத்தியதையடுத்து மாணவர்கள் மறியலை கைவிட்டு கல்லூரி நோக்கி பேரணியாக சென்றனர்.
Next Story