வடமாடு மஞ்சுவிரட்டு - பாரம்பரிய விளையாட்டை பார்த்து ரசித்த பொதுமக்கள்
சிவகங்கை அடுத்த பிள்ளைவயல் கிராமத்தில், காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, பாரம்பரிய விழாவான வடமாடு மஞ்சுவிரட்டு களைகட்டியது.
சிவகங்கை அடுத்த பிள்ளைவயல் கிராமத்தில், காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, பாரம்பரிய விழாவான வடமாடு மஞ்சுவிரட்டு களைகட்டியது. சிவகங்கை, ஆவரங்காடு, இளைஞர்கள் சார்பில் நடத்தப்பட்ட வடமாடு மஞ்சு விரட்டில், சிவகங்கை, மதுரை, தேனி, புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த காளைகள் களமிறக்கப்பட்டன. காளைக்கு10 வீரர்கள் வீதம், 120க்கும் வீரர்கள் களமிறங்கி, காளைகளுடன் மோதினர். காளைகள் சீறிப் பாய்ந்ததில், வீரர்கள் 7 பேர் காயமடைந்தனர். சிறப்பாக விளையாடிய காளையர் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
Next Story