கோவை - மயிலாடுதுறை ஜன்சதாப்தி விரைவு ரயில் தடம் புரண்டது
கோவை - மயிலாடுதுறை ஜன சதாப்தி விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில், அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.
கோவை - மயிலாடுதுறை ஜன சதாப்தி விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில், அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர். மயிலாடுதுறை ரயில்வே நிலையம் அருகே ஒரு வளைவில் திரும்பும் போது இன்ஜின் சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு புரண்டு தடுமாறின. உடனே ரயில் ஓட்டுனர், சாமர்த்தியமாக ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. திருச்சி - சென்னை இடையிலான மெயின் லைன் வழித்தடத்தில் இந்த விபத்து நடந்து இருப்பதால், அவ்வழியே செல்லும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன. தொடர்ந்து ரயில் போக்குவரத்தை சரி செய்யும் பணி நடைபெற்றது.
Next Story