சிலை கடத்தல் வழக்கு- தமிழக அரசுக்கு அவகாசம்
சிலை கடத்தல் வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் அமல்படுத்த அரசு எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தரப்பில், அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
சிலை கடத்தல் வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் அமல்படுத்த அரசு எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தரப்பில், அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சிறப்பு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிலைக்கடத்தல் வழக்குகள் விசாரணைக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்குவதில்லை எனவும் மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு பதிலளித்த தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தான் தாக்கல் செய்ய முடியும் என எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் அவகாசம் வழங்கியும் நீதிமன்ற உத்தரவுகள் அமல்படுத்தவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை இரண்டு வாரங்களில் தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டனர்.
Next Story