24 மணி நேரமும் இயங்கும் மதுபானக்கடை : அரசு பள்ளி அருகே அரங்கேறும் அவலங்கள்
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே 24 மணிநேரமும் செயல்பட்டுவரும் மதுபானக் கடையை உடனடியாக அகற்றவேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே 24 மணிநேரமும் செயல்பட்டுவரும் மதுபானக் கடையை உடனடியாக அகற்றவேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த மதுபானக்கடையில், அதிகாலை முதலே தொடரும் போதை ஆசாமிகள் அட்டகாசத்தால், மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை என பெற்றோர் புகார் தெரிவித்தனர். அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், மதுப்பிரியர்களால் தொந்தரவுக்கு உள்ளாகிறார்கள் என குற்றம்சாட்டும் மக்கள், அரசு தலையிட்டு மதுக்கடையை நிரந்தரமாக மூட உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
Next Story