மாவோயிஸ்ட் தலைவர்கள் - துப்பு கொடுத்தால் பரிசு : தேசிய புலனாய்வு முகமை அறிவிப்பு

தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகாவில் உள்ள மலை கிராம பகுதிகளில் தேடப்படும் இரு முக்கிய மாவோயிஸ்ட் இயக்க தலைவர்கள் குறித்து தகவல் கொடுத்தால் சன்மானம் வழங்கப்படும் என தேசிய புலனாய்வு முகமை அறிவித்துள்ளது.
மாவோயிஸ்ட் தலைவர்கள் - துப்பு கொடுத்தால் பரிசு : தேசிய புலனாய்வு முகமை அறிவிப்பு
x
தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய பகுதிகளில் அதிரடிப்படை மற்றும் நக்சல் தடுப்பு படை உருவாக்கப்பட்டு மாவோயிஸ்ட்டுக்களின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில், குறிப்பிட்ட இரண்டு மாவோயிஸ்ட் தலைவர்களின் புகைப்படங்களை வெளியிட்டு இவர்கள் குறித்து தகவல் அளித்தால் இரண்டு லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என தேசிய புலனாய்வு முகமை அறிவித்துள்ளது.  தற்போது அவர்கள் இருவரும் தமிழக, கேரள எல்லையோர வனப்பகுதியில் மறைந்துள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், கேரள காடுகளை ஒட்டியுள்ள கோவை மாவட்டத்தின், மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்