இலங்கை வசம் 5 தமிழக மீனவர்கள் உள்ளனர் : சட்டபேரவையில் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
தமிழகத்தை சேர்ந்த ஐந்து மீனவர்கள் மற்றும் 33 மீன்பிடி படகுகள் மட்டுமே இலங்கை கடற்படை வசம் உள்ளதாக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த ஐந்து மீனவர்கள் மற்றும் 33 மீன்பிடி படகுகள் மட்டுமே இலங்கை கடற்படை வசம் உள்ளதாக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். இலங்கையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் குறித்து தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் இதயவர்மன் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார். இலங்கை கடற்படையால் இந்தாண்டு கைது செய்யப்பட்ட மீனவர்களில் நூறு பேர் தாயகம் அழைத்துவரப்பட்டதாக கூறிய அவர், 2018 ஆம் ஆண்டு இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 156 மீனவர்களும் 26 மீன்பிடி படகுகளையும் மீட்கப்பட்டதாக தெரிவித்தார்.
Next Story