பால் உற்பத்தியாளர்களுக்கு விலையை உயர்த்த தயார் : சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு
எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளித்தால், பால் உற்பத்தியாளர்களுக்கு விலையை உயர்த்த அரசு தயார் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளித்தால், பால் உற்பத்தியாளர்களுக்கு விலையை உயர்த்த அரசு தயார் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சட்டப்பேரவையில் இன்று பேசிய முதலமைச்சர், பால் உற்பத்தியாளர்களுக்கு விலையை உயர்த்தினால், நுகர்வோர்களுக்கான விலையையும் உயர்த்த வேண்டியிருக்கும் என்றார். அவ்வாறு செய்தால் எதிர்க்கட்சிகள், பிரச்சினை செய்வீர்களே என்றார். அப்போது பேசிய திமுக உறுப்பினர் கே.பி.பி.சாமி, பால் உற்பத்தியாளர்களுக்கு மட்டும் விலையை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்றார்.
Next Story