வைகோவுக்கு எதிரான தேச துரோக வழக்கு : ஓராண்டு சிறை, ரூ.10,000 அபராதம் விதித்து உத்தரவு - ஒரு மாதம் தண்டனை நிறுத்தி வைப்பு

தேச துரோக வழக்கில் ம.தி.மு.க. பொதுச்செயலார் வைகோவுக்கு, ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
x
கடந்த 2009-ம் ஆண்டு, சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில், வைகோ மீது, தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில், வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் வழங்கி, நீதிபதி சாந்தி தீர்ப்பளித்தார். 
மேல்முறையீடு மனு தாக்கல் செய்ய உள்ளதால் தீர்ப்பை நிறுத்தி வைக்க கோரி வைகோ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து தீர்ப்பை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ​வைகோ, தாம் பேசியதில் எந்த தவறும் இல்லை என்றும், விடுதலை புலிகளுக்கு ஆதரவாக தொடர்ந்து பேசிக் கொண்டு இருப்பேன் என்றும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்