சிறையில் உள்ள நளினிக்கு ஒரு மாதம் பரோல் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
மகளின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க, ராஜிவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
ராஜிவ் வழக்கில் வேலூர் மத்திய சிறையில் உள்ள நளினி, தனது மகள் திருமண ஏற்பாடுகளை கவனிக்க 6 மாதங்கள் பரோல் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணைக்கு இன்று நளினி நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் வாதிடுகையில், குற்றவாளிகளாக ஆக்கப்பட்ட நிரபராதிகளில் தானும் ஒருவர் என்றும், மகளை சந்தித்து 16 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அவருக்கு தாயாக எந்தவொரு செயலையும் செய்ய முடியவில்லை என்றும் கண்ணீர் மல்க தெரிவித்தார். இதனை தொடர்ந்து சிறை விதிகளின்படி 6 மாதங்கள் பரோல் வழங்க முடியாது என்பதால் ஒரு மாதம் மட்டுமே வழங்க முடியும் என அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். நளினி உட்பட 7 பேரை விடுவிக்க அரசே பரிந்துரைத்திருப்பதால், அவருக்கு ஒருமாத பரோல் வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஒருவார காலத்திற்குள் அவருக்கு பிணை வழங்குவது யார் என்பது உள்ளிட்ட விவரங்களை காவல்துறையினருக்கு வழங்கவும், விவரங்களை பெற்றுக்கொண்ட 10 நாட்களில் பரோல் வழங்குவது குறித்து அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.
Next Story