"புறநானூற்று பாடலை மேற்கோள் காட்டி தமிழுக்கு பெருமை" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை நாடு வளர்ச்சி பெறும் வகையில் தொலை நோக்கு பார்வை கொண்டதாக உள்ளது என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் முன்னேற்றத்திற்கு தேவையான புதிய கொள்கைகளோடு வெளியான நிதிநிலை அறிக்கையை தான் வரவேற்பதாக கூறியுள்ளார். சாலை மேம்படுத்தும் திட்டத்தன் கீழ் தமிழகத்துக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், புதிய மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதோடு, சென்னை புறநகர் ரயில்வே சேவைகளை மேலும் மேம்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். மின்சாரத்தின் மேல் விதிக்கப்படும் வரிகளை மாற்றியமைப்பது தொடர்பாக மாநில அரசுகளை கலந்து ஆலோசித்த பிறகு செயல்படுத்த வேண்டும் என்றும், வேளாண் அபிவிருத்தி திட்டங்களுக்கு கணிசமான நிதி ஒதுக்கீடு உயர்த்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அனைத்து துறைகளிலும் நாடு மேலும் வளர்ச்சி பெறும் வகையில் தொலைநோக்கு பார்வை கொண்ட இந்த நிலையை அறிக்கையை வரவேற்பதோடு, புறநானூற்று பாடலை மேற்கோள்காட்டி தமிழுக்கு பெருமை சேர்த்ததற்கு நன்றி தெரிவிப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
Next Story