சேலம் உருக்காலை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் - ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பழனிசாமி பதில்

சேலம் உருக்காலை தனியார் மயமாக்குவதை தடுத்து நிறுத்த, இரு கட்சி எம்.பி.க்களும் பிரதமரிடம் நேரில் முறையிடலாம் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் உருக்காலை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் - ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பழனிசாமி பதில்
x
சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முயற்சியை கண்டித்து, அந்த ஆலை தொழிலாளர்கள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு இந்த முடிவை கைவிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தொழிலாளர்களின் போராட்டத்தால், உருக்காலை உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,  சேலம் உருக்காலை தனியார் மயமாக்கப்படுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி, சட்டப்பேரவையில் தி.மு.க. சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை காரணமாக லாபத்தில் இயங்கி வந்த சேலம் உருக்காலை நஷ்டத்தில் இயங்குவதாக குறிப்பிட்டார். உருக்காலைக்கு தேவையான மின்சாரத்தை கொடுக்க, மத்திய அரசு மறுத்து வருவதாக அவர் குற்றம்சாட்டினார். இரு அவைகளிலும் சேலம் உருக்காலை பற்றி கேள்வி எழுப்பி நடவடிக்கை எடுப்போம் என, ஸ்டாலின் கூறினார். தனியார் மயமாக்குவதை தடுத்து நிறுத்த, அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என, அவர் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் கூறியது போல், அ.தி.மு.க. - தி.மு.க. எம்.பி.க்கள் சேர்ந்து, பிரதமர் மற்றும் துறை அமைச்சரை சந்தித்து மனு அளிப்போம் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்