தண்ணீரின்றி டயாலிசிஸ் சிகிச்சை பெற முடியவில்லை : அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் தவிப்பு
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தண்ணீரின்றி, டயாலிசிஸ் சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் தவித்தனர்.
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தண்ணீரின்றி, டயாலிசிஸ் சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் தவித்தனர். கடந்த இரண்டு நாட்களாக தண்ணீர் இல்லாமல் டயாலிசிஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால் நோயாளிகள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகினர். இதில் சுந்தரி என்ற பெண்ணுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு தீவிர சிசிக்கை பிரிவுக்கு மாற்றப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த நோயாளிகளின் உறவினர்கள் காத்திருப்பு போரட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தந்தி டி.வி. செய்தி வெளியிட்ட சிறிது நேரத்திலேயே, மின் மோட்டார் பழுது பார்க்கப்பட்டு தண்ணீர் பிரச்சினை சரி செய்யப்பட்டது. தற்போது, 22 இயந்திரங்களில், 10 இயந்திரம் மட்டுமே தற்காலிகமாக இயக்கப்படுவதாக, கூறப்படுகிறது.
Next Story