"தேர்தல் தேதி அறிவித்தபின் விதிமீறலாமா?" - பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கேள்வி

தேர்தல் தேதி அறிவித்தபின் விதிமுறைகளை மீறலாமா என, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
தேர்தல் தேதி அறிவித்தபின் விதிமீறலாமா? - பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கேள்வி
x
கேள்விநேரம் முடிந்த பிறகு பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், வேலூரில், விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். இந்நிலையில், போதை ஒழிப்பு பிரசாரத்திற்கான நிதி ஒதுக்கீடு வேலூர் மாவட்டத்திற்கும் அமைச்சர் அறிவித்திருப்பது, விதிமீறல் இல்லையா எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கமணி, தேர்தல் தேதி அறிவிப்பு வருவதற்கு முன் சலுகை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு விட்டதாக விளக்கம் அளித்தார். எனினும், இது போல் நடக்காமல் பார்த்து கொள்வதாக கூறிய அவர், வேலூர் மாவட்டத்திற்கான அறிவிப்பு நிறுத்தி வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.  

Next Story

மேலும் செய்திகள்