வைகோவுக்கு எதிரான தேச துரோக வழக்கு குறித்த விவரங்கள் : ஒரு தொகுப்பு
கடந்த 2009ம் ஆண்டு சென்னை ராணி சீதை மன்றத்தில் 'நான் குற்றம் சாட்டுகிறேன்' என்ற புத்தக வெளியீட்டு நடைபெற்றது.
கடந்த 2009ம் ஆண்டு சென்னை ராணி சீதை மன்றத்தில் 'நான் குற்றம் சாட்டுகிறேன்' என்ற புத்தக வெளியீட்டு நடைபெற்றது. இந்த விழாவில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு பேசினார். அப்போது, விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக, அவர் மீது தேச துரோகம் மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ், ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு, கடந்த ஆண்டு மாற்றப்பட்டது. இந்த வழக்கில், 9 அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது. சாட்சியத்தின் அடிப்படையில் வைகோவிடம் கேள்விகளைக் கேட்டு பதில் பெறப்பட்டது. இரு தரப்பு வாதங்கள் என அனைத்து நடைமுறைகளும் முடிவடைந்து, தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Next Story