நீதிமன்ற அவமதிப்பு வழக்கு : உள்துறை செயலர், டிஜிபி ஆஜராக உத்தரவு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பணிவரன்முறை தொடர்பாக ஆயுதப்படை காவலர்கள் தூத்துக்குடி இசக்கியம்மாள், கன்னியாகுமரி அனிதா உள்ளிட்ட 167 பேர் தொடர்ந்திருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது போது பணிவரன்முறை செய்ய வேண்டுமென்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதால், அவமதிப்பு வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்க மறுத்த நீதிபதி, உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோர் ஜூலை 17ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டார்.
Next Story