அனைத்து பேருந்து நிலையங்களிலும் சி.சி.டி.வி. கேமிரா பொருத்த வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ராஜேந்திரன், என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழக மேம்பாடு மற்றும் நிதி கழகத்தின் இணை மேலாண்மை இயக்குனரான சுகுமார் முறைகேடுகளில் ஈடுபடுவதாக மனுதாரர் குற்றஞ்சாட்டினார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் புகார் மனு தொடர்பாக போக்குவரத்து துறை முதன்மை செயலர் 6 வாரத்தில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். மேலும் அரசு போக்குவரத்து கழகத்தில் நிர்வாக பொறுப்பில் இருக்கும் உயர் அதிகாரிகள், மனைவி மற்றும் அவர்களை சார்ந்தவர்களின் சொத்துக்கள், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார்களாக என்பது தொடர்பாக 4 மாதத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார். அரசு போக்குவரத்து கழகங்களில் பணிகளையும், அங்கு நடைபெறும் தவறுகளை கண்காணிக்கவும், சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Next Story